தோனி போன்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு, தொடர்ச்சியாக நடைபெற இருக்கும் ஒரு நாள் தொடர்கள் சிறப்பானதாக அமையும் என இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி கூறினார்.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இந்தியா அணிக்கு எதிரான தொடரில், குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற முடியும் என்ற நெருக்கடி இலங்கை அணிக்கு உள்ளது. இதனால் இன்றைய போட்டி, ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘அணியில் வீரர்களின் பயன்பாடு மற்றும் வீரர்கள், உலக கோப்பை போட்டிக்கான அணிக்கு தயாராவது ஆகியவற்றை நிர்ணயிக்கக்கூடிய வாய்ப்பாக வரும் போட்டிகள் மற்றும் தொடர்கள் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்கள்) அமையும். கடந்த வருடம் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி அதிமாக விளையாடவில்லை. இப்போது தொடர்ச்சியாக பல போட்டிகள் நடக்க இருப்பது டெஸ்ட்டில் விளையாடாத மற்ற வீரர்களுக்கு உத்வேகத்தை பெற உதவியாக இருக்கும். தோனி போன்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாட வீரர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அக்ஷர் பட்டேல் சிறப்பாக செயல்படுவதால் குல்தீப் யாதவை விட அவருக்கு அணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது’ என்றார்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'