Published : 24,Aug 2017 01:45 AM

தமிழக அமைச்சர்கள் சென்னை வர முதலமைச்சர் உத்தரவு

TN-CM-Palanisamy-ordered-to-Minster-to-come-chennai

தமிழக அமைச்சர்கள் அனைவரையும் சென்னை வருமாறு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களோடு இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், பொதுக்குழுக் கூட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படுமெனத் தெரிகிறது.

இரு அணிகள் இணைப்புக்குப் பிறகு, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ள சூழலில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுக்குழுவை கூட்டுவது, இரட்டை இலை சின்னத்தை மீட்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுமெனத் தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்