[X] Close

2 ஆவது நாளாக சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்

ttv-dinakaran-support-mlas-in-puthucherry-hotel

புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இரண்டாவது நாளாக சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.

புதுச்சேரி சின்னவீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் தங்கியுள்ளனர். இவர்களை சந்திக்க தினகரன் புதுச்சேரி செல்வார் என்று கூறப்படுகிற‌து. இந்நிலையில் புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்திசேகர் தலைமையில் அங்கு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது டிடிவி தினகரனின் உருவபொம்மையை எரித்தும், தினகரனுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியைச்சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 18 எம்எல்ஏக்களும் நாளை வரை சொகுசு விடுதியில் தங்கியிருக்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close