Published : 23,Aug 2017 03:53 PM
அமைச்சர்கள் நாளை சென்னை வர முதல்வர் உத்தரவு

அமைச்சர்கள் அனைவரும் நாளை சென்னையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக நாளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு டிடிவி தினகரன் அணியினர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தது சசிகலா குடும்பத்தினர்தான். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே கட்சியில் இருப்பவர்கள் நாங்கள்தான். எங்கள் பக்கம் 80 சதவீத உறுப்பினர்கள் உள்ளனர். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என அதிமுக எம்.பி வைத்திலிங்கம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் நாளை சென்னை வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவர்களுடன் ஆலோசனை செய்து பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.