[X] Close

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை அறிவித்தது பிசிசிஐ!

விளையாட்டு

BCCI-Announced-Indian-Cricket-Team-squad-for-South-Africa-Tour-by-BCCI-and-Virat-Kohli-will-lead-only-Test-Team

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் 26-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ). 

image

அணி விவரம்!


Advertisement

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ். 

ரிசர்வ் வீரர்கள் : நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்சன் நாக்வாஸ்வல்லா, 

காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா, ஷூப்மன் கில், அக்சர் படேல், ராகுல் சாஹர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

ரஹானேவின் இந்திய டெஸ்ட் துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. அதே போல ரோகித் ஷர்மா இனி வரும் போட்டிகளில் ஒருநாள் மற்றும் டி20 அணியை வழிநடத்துவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. கோலி, இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்தியாவை வழிநடத்துவார். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close