[X] Close

மாதொருபாகன் ஆங்கில பதிப்பிற்கு விருது: ஆன்மீக அமைப்பு சார்பில் போராட்டம்

protest-against-award-for-perumal-murugan-book-one-part-woman

மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அனைத்து ஆன்மீக அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


Advertisement

எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல், திருச்செங்கோடு பகுதி மக்களின் கலாச்சாரத்தை கொச்சை படுத்துவதாக கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக மாதொருபாகன் நாவலின்‌ தமிழ் பதிப்புகள் திரும்பப்பெறப்பட்டன. இந்நிலையில் மாதொருபாகன் நாவலின் ஆங்கிலப்பதிப்பான ’ஒன் பார்ட் உமன்’ நாவலுக்கு, இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 28ஆம் தேதி விருது வழங்கப்பட உள்ள நிலையில், மத்திய அரசு விருதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோடு அனைத்து ஆன்மீக அமைப்பு‌களின் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


Advertisement

Advertisement
[X] Close