Published : 23,Aug 2017 03:39 PM

தனிமனித தகவல் பாதுகாப்பு அடிப்படை உரிமையா? உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

supreme-court-to-decide-tomorrow-whether-privacy-a-fundamental-right

தனிமனித தகவல் பாதுகாப்பு என்பது அடிப்படை உரிமையா என்ற வழக்கில் உச்சநீதிமன்ற 9 நபர் அமர்வு நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.

அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் போது தனிமனித தகவல் பாதுகாப்பு அடிப்படை உரிமையா என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரத்தை முடிவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு தொடர்ந்து 6 நாட்களுக்கு விசாரணை நடத்தியது. 

அப்போது அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் உள்ளிட்டோர் ஆஜராகினர். இந்த வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி மனித தகவல் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கின் தீர்ப்பு, ஆதார் தொடர்பான வழக்கின் போக்கை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்