கடந்த வாரத்தில் இருந்து காணாமல் போன 31 வயது ராணுவ வீரர், இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் ரயிலில் அடிபட்டு இறந்தார், அவரது மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது .
லூதியானாவில் உள்ள பூபேந்திர சிங் ஓம்பிரகாஷ் டோகாஸ், தொழில்நுட்ப படிப்புக்காக மும்பை வந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மீரா ரோடு மற்றும் தஹிசார் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும் போது அவர் மீது ரயில் மோதியதாக ரயில்வே காவல்துறை அதிகாரி தெரிவித்தார். ரயில்வே போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, அந்த நபர் நவம்பர் 30 அன்று தெற்கு மும்பையில் நேவி நகரில் உள்ள ராணுவ வளாகத்தில் இருந்து யாருக்கும் தெரிவிக்காமல் வெளியேறியதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் ஏன் அந்த இடத்தை விட்டு வெளியேறினார் என்பது குறித்து யாருக்கும் தகவல் தெரியவில்லை, அதன்பின்னர் அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று விசாரணை அதிகாரி கூறினார்.
இது தொடர்பாக அவரை காணவில்லை என்று கஃபே பரேட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் அவரை தேடும் பணி நடந்து வந்தது. இறந்த ராணுவ வீரர் பூபேந்திர சிங் ஓம்பிரகாஷ் டோகாஸ் ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள ஹர்சோலி கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
இதனைப்படிக்க...சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் ரூ.1000 கோடி வருவாயை மறைத்தது அம்பலம்
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!