'தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலான விதிகளுக்கான முன்மொழிவை அரசுக்கு அனுப்பியுள்ளோம்’ என தமிழக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த இரு பெண்கள் சில மாதங்களுக்கு முன்னர் நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால் பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து பிரிக்க முயற்சித்ததால், இருவரும் மதுரையில் இருந்து சென்னை வந்து தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இருவரையும் காணவில்லை என பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் அவ்விரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தொடர்புடைய செய்தி: இரு பெண்கள் சேர்ந்து வாழும் விவகாரம்: உளவியல் ரீதியான கருத்துகளை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம், அதை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மேலும் தமிழக டிஜிபிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷூக்கு, “மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்ட விதிகளில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்” என அறிவுறித்தியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக டிஜிபி தரப்பில் “சமபாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளுக்கான முன்மொழிவை அரசுக்கு அனுப்பியுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்