Published : 23,Aug 2017 01:59 PM
எதிர்க்கட்சிகள் நடத்தும் நீட் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் தங்களது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
நீட் விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து நாளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் தினகரன் அணியைச் சேர்ந்த திவாகரனும் தங்களின் ஆதரவாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவித்துள்ளார்.