சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அதிகாரிகள் அளவில் புறக்கணிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இவ்விளையாட்டு போட்டிகளை அதிகாரிகள் அளவில் புறக்கணிக்கப்போவதாக அமெரிக்காவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சாக்கி, குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர் என்றும் ஆனால் இப்போட்டிக்கான கொண்டாட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஜென் சாக்கி தெரிவித்தார். ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் இதே ரீதியில் சீனாவுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளன.
சீனாவில் உய்குர் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் சித்ரவதை மற்றும் படுகொலைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அதை கண்டித்து பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இதனைப்படிக்க...'விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன்' - இர்பான் பதான் பாராட்டு
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்