நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’ ட்ரைலர் வெளியாகியுள்ளது.
’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ’பன்வார் சிங் ஷெகாவத் ஐபிஎஸ்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீவள்ளி என்ற பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இம்மாதம், 17 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர் தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.
செம்ம்ம்ம்ம்ம கலர்ஃபுல்லாக வெளியாகியிருக்கும் ட்ரைலரில் அல்லு அர்ஜுன் செம்மரக்கட்டை கடத்தல்காரராக மிரட்டல் நடிப்பில் தெறிக்கவிடுகிறார். அவரின் உடல் மொழி சில இடங்களில் வீரப்பனை நினைவூட்டி அட போடவைக்கிறது.
’தங்கம் டா இது மண்ணுக்கு மேல விளையுற தங்கம்... பேரு செஞ்சந்தனம்’, ‘இந்த உலகம் உங்களுக்குத் துப்பாக்கியைத் தந்திருக்கு... எனக்கு கோடாளியை தந்திருக்கு’, ’புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைசீங்களா? ஃபயர்ரு’ போன்ற வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. ட்ரைலரின் கடைசியில் ‘பார்ட்டி இல்லையா புஷ்பா’ என மொட்டைத்தலை கெட்டப்பில் ஃபகத் ஃபாசில் கேட்பது கட்டாயம் அல்லு அர்ஜுன் - ஃபகத் ட்ரைலரே பெரும் பார்ட்டிதான் என்று உற்சாகமுடன் ரசிகர்களை சொல்ல வைக்கிறது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!