சிவகார்த்திகேயனின் ‘டான்’ வரும் பிப்ரவரியில் வெளியாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் டாப் 10 படங்களிலும் ட்ரெண்டிங்கில் உலகளவில் உள்ளது. அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.
‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் புகைப்படங்களும் வெளியாகி கவனம் ஈர்த்தது. சிவகார்த்திகேயன் டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார். இந்த நிலையில், ‘டான்’ வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!