[X] Close

விருதுநகரில் 2 மாதத்தில் 67 பேருக்கு டெங்கு உறுதி

வீடியோ ஸ்டோரி

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 67 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழத்தில் நாளுக்குநாள் டெங்கு பரவலின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபரில் 21, நவம்பரில் 40, டிசம்பரில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. 2 மாதங்களில் 67 பேருக்கு டெங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

இங்கு டெங்கு தடுப்புப் பணியில் 1173 களப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2015-இல் விருதுநகர் மாவட்டத்தில் டெங்குவுக்கு 54 பேர் பலியான நிலையில், தற்போது டெங்கு மீண்டும் பரவுவதால் மக்கள் மத்தியில் அச்சம் பரவி வருகிறது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close