Published : 06,Dec 2021 10:14 AM
தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்?

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணையை வரும் ஜனவரி மாதம் 3வது வாரத்தில் வெளியிடவும் மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.