Published : 04,Jan 2017 06:50 AM
'தம்பி வா.. தலைமையேற்க வா...' துரைமுருகன் உணர்ச்சிமயம்

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், மு.க.ஸ்டாலினை பார்த்து, ‘தம்பி வா தலைமையேற்க வா.. உன் ஆணைக்கு கட்டுப்பட்டு நிற்கிறோம்’ என்று அண்ணாவின் பேச்சை மேற்கொள் காட்டி துரைமுருகன் உணர்சிவசமாக நா தழுதழுக்க பேசினார்.
சென்னை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதற்கான தீர்மானத்தை க.அன்பழகன் முன்மொழிய துரைமுருகன் வழிமொழிந்தார்.
பின்னர் துரை முருகன் மேடையில் பேசும்போது, மிகுந்த உணர்ச்சிமயமானவராக காணப்பட்டார். அப்போது மு.க.ஸ்டாலினை பார்த்து ‘தம்பி வா தலைமையேற்க வா.. உன் ஆணைக்கு கட்டுப்பட்டு நிற்கிறோம்.. இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்’ என்று உணர்ச்சிபொங்கவும், கண்ணீர் மல்கவும் பேசினார். இதனைக் கண்ட மு.க.ஸ்டாலினுக்கும் நெகிழ்ச்சியால் தன்னை அறியாமல் கண்ணீர் வந்தது.