மதுரையில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா நடத்திய காவல் உதவி ஆய்வாளர் வந்திருந்த அனைவருக்கும் விருந்து வைத்தார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் மதுரை மாநகர காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சக்திவேல் தனது வீட்டில் கடந்த மூன்று வருடங்களாக டாபர் மேன் வகையைச் சேர்ந்த சுஜி என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், செல்லமாக வளர்த்து வரும் தனது நாய் கர்ப்பம் தரித்த நிலையில், அவரது குடும்பதினர் வளைகாப்பு நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து இன்று தனது வீட்டில் பெண் நாய் சுஜிக்கு வளைகாப்பு நடத்தினார். தனது குடும்பத்தினரோடு, அருகில் வசிப்பவர்களையும் அழைத்து தடபுடலாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.
வளைகாப்பின் போது பெண் நாய் சுஜிக்கு வண்ண வண்ண வளையல்கள் அணிவித்தும், மாலை அணிவித்தும் ஒரு பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது போல நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். மேலும் ஐந்து வகை உணவுகளை தயார் செய்து அதனை சுஜிக்கு அளித்ததோடு, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கு விருந்து வைக்கப்பட்டுள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தனது வளர்ப்பு நாய் சுஜிக்கு நடத்திய வளைகாப்பு வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு, நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide