Published : 05,Dec 2021 04:49 PM

சிவகங்கை: மோடியின் படம் இல்லை எனக் கூறி தடுப்பூசி முகாம் பேனரை அகற்றிய பாஜகவினர்

case-filed-against-bjp-cadres

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் கட்டப்பட்டிருந்த பேனரில் மோடியின் படம் இடம்பெறவில்லை என கூறி பாஜகவினர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இருவர் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைகிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருந்தது. முகாமில் தமிழக முதலமைச்சர் இடம்பெற்றிருந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த பாஜகவை சேர்ந்த சிலர், பேனரில் மோடி படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அங்கிருந்த மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

image

மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரையும் அவிழ்த்து, மருத்துவர்களையும் எச்சரிக்கும் விதமாக பேசினர். இதுகுறித்து சாலைகிராமம் காவல் நிலையத்தில், சாலை கிராம ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கண்ணன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சம்பவத்தில் ஈடுபட்ட சாலை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன்,செல்லப்பாண்டி மற்றும் அடையாளம் தெரியாத பலரை தேடி வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்