Published : 05,Dec 2021 04:43 PM
“நான் எந்த கட்சியையும் சார்ந்தவள் அல்ல! தேசியவாதிகளுக்காக பிரச்சாரம் செய்வேன்”- கங்கனா!

தனது அதிரடி பேச்சு மூலம் அதிர்வலைகளை எழுப்பி வருபவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். சமயங்களில் அது சர்ச்சையாகவும் முடிவதுண்டு. இந்த நிலையில் அவர் எந்த கட்சியையும் சார்ந்த பிரதிநிதி இல்லை என்பதை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள ‘பகவான் கிருஷ்ணர்’ கோவிலுக்கு சென்ற போது, “2022 உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்வீர்களா?” என செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு இந்த பதிலை தெரிவித்துள்ளார் அவர்.
“நாம் எல்லோரும் கேள்விப்பட்டு உள்ளதை போல பகவான் கிருஷ்ணரின் உண்மையான ஜனன பிறப்பிடத்தை (சிறைச்சாலை) எல்லோரும் தரிசிப்பதற்கான முயற்சிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் எந்த கட்சியையும் சார்ந்தவள் அல்ல. அதே நேரத்தில் தேசியவாதிகளுக்காக பிரச்சாரம் செய்வேன்” என தெரிவித்துள்ளார் அவர்.