சிறார் பாலியல் குற்றத் தடுப்புக்கான போக்சோ சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகளை, சம்பந்தப்பட்ட இருதரப்பினர் சமரசத்தால் ரத்து செய்ய முடியுமா என ஆராய இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவியிடம் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மலப்புரம் மாவட்ட காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதன் மீதான விசாரணை நடந்து வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவருடன் சமரசம் ஏற்பட்டதாக மாணவியின் தாய் எழுத்துப்பூர்வ கடிதம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று கேரள உயர்நீதிமன்றம் போக்சோ வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கேரள அரசு செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், போக்சோ வழக்கை சமரசத்தின் அடிப்படையில் ரத்து செய்ய முடியுமா என ஆராய வேண்டியுள்ளதாகக் கூறியுள்ளதுடன் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.
இதனைப்படிக்க...ராணுவ வீரர்களுடன் இணைந்து சாலையை சீரமைத்த டிஎஸ்பி-க்கு குவியும் பாராட்டு
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்