மதுரை: தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

மதுரை: தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை
மதுரை: தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் நியாய விலைக்கடை, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், கடைவீதிகள், துணிக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட 18 இடங்களில் செல்லத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். 

மதுரை மாவட்டம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் நேற்று தெரிவித்த நிலையில் ஆட்சியர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவரை மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 71 சதவீதம் பேரும், 2ஆம் தவணை 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர். ஏற்கெனவே கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மதுரை மாவட்டமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com