Published : 03,Dec 2021 07:02 AM

இந்தியா -நியூசிலாந்து மோதும் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

The-second-Test-between-India-and-New-Zealand-starts-at-9-30-am-today-at-the-Wankhede-Stadium-in-Mumbai
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
 
இரு அணிகளும் மோதிய கான்பூர் டெஸ்ட்டை நியூசிலாந்து போராடி டிரா செய்தது. இந்நிலையில் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் இரண்டாவது டெஸ்ட்டை எதிர்நோக்கியுள்ளன. முதல் டெஸ்ட்டில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளார். இந்நிலையில் இந்தியாவின் பேட்டிங் வரிசையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
image
பேட்டிங் தூண்கள் விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகிய மூவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசி நீண்ட காலம் ஆகி விட்டதால், இவர்களின் பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பந்து வீச்சில் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக முகமது சிராஜ் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இளம் விக்கெட் கீப்பர் பரத் இன்றைய போட்டியில் சர்வதேச அறிமுகம் பெறுவார் என பேசப்படுகிறது.
 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்