[X] Close

முடிவுகள் வருவதற்கு முன்பே இந்தியாவை விட்டு தப்பிய ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்

கொரோனா வைரஸ்

South-African-Patient-suffered-from-Omicron-Variant-COVID19-strain-who-managed-to-escape-from-Karnataka-State-in-India-before-the-test-was-confirmed

இந்தியாவில் முதல் முறையாக இருவருக்கு ஒமைக்ரான் திரிபு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதில் ஒருவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் மற்றொருவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவரான தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வெளிநாட்டவர் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவதற்கு முன்பே இந்திய நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 

image

தென்னாப்பிரிக்கவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இயங்கி வரும் மருந்து கம்பெனியின் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வரும் 66 வயதான முதியவர் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு ‘கொரோனா இல்லை’ என்ற நெகட்டிவ் சான்றிதழுடன் வந்துள்ளார். 


Advertisement

இருந்தும் அவருக்கு பெங்களூருவில் உள்ள கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா தொற்று கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 

தொடர்ந்து அவர் வசந்த்நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அதே நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதையடுத்து உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அவரை தனித்திருக்கும் படி சொல்லியுள்ளனர். அவருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா திரிபுவின் மரபணுவை பரிசோதிக்கும் நோக்கில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 

image


Advertisement

மறுநாளே உள்ளூரில் இயங்கி வரும் தனியார் ஆய்வுக் கூடத்தை அணுகிய அவர் தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் விடுதியை விட்டு வெளியேறி சென்றுள்ளார். பின்னார் வாடகை கார் மூலம் விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து துபாய் சென்றுள்ளார். தற்போது அவர் அங்கிருந்தும் தப்பி விட்டதாக சொல்லப்படுகிறது. 

அவருக்கு ஒமைக்ரான் திரிபு பாதிப்பு இருப்பது பரிசோதனை மூலம் உறுதியான போது அவர் இந்தியாவில் இல்லை. இந்த விவகாரத்தில் இதற்கு மேல் தகவல் ஏதும் சொல்வதற்கு இல்லை என சொல்லியுள்ளனர் உள்ளூர் அதிகாரிகள். 

இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 12: Friends2Support - ரத்தக் கொடையாளர், தேவைப்படுவோரை இணைக்கும் ஆப் 


Advertisement

Advertisement
[X] Close