Published : 02,Dec 2021 03:53 PM
வரும் ஜனவரியில் கார்களின் விலையை உயர்த்துகிறது மாருதி நிறுவனம்!

இந்தியாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் பெரும்பாலான கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வரும் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கார் உற்பத்திக்கான செலவுகள் கூடி இருப்பதால் இந்த விலை ஏற்றத்தை செய்ய வேண்டி உள்ளதாக மாருதி நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
மாடலை பொறுத்து கார்களின் விலையில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக கார்களின் விலையை உயர்த்தியுள்ளது.
இந்த ஆண்டில் மட்டுமே மார்ச், ஜூலை, செப்டம்பர் மாதங்களில் விலையை உயர்த்தி இருந்தது மாருதி.
செமிகன்டக்டர் பற்றாக்குறையால் வழக்கத்தை விடவும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.