[X] Close

வீடு இடிந்து சேதம்: தாய், தந்தை இல்லை - பாட்டியின் அரவணைப்பில் வளரும் மாணவிக்கு சிக்கல்

வீடியோ ஸ்டோரி

தாய், தந்தையை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துவரும் மாணவிக்கு, வடகிழக்குப்பருவமழை கூடுதல் சோகத்தை கொடுத்துள்ளது. இருக்கிற வீடும் இடிந்ததால் செய்வதறியாமல் தவிக்கிறார்.

கூரை இழந்த வீட்டை தார்ப்பாய் மூடியிருக்கிறது. கற்கள் பெயர்ந்தும் உடைந்தும், சுவர் இடிந்தும், இடியாமலும் இருக்கும் இந்த வீட்டில்தான் வசிக்கிறது சிறுமி கஸ்தூரியின் குடும்பம். செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே சின்ன களக்காடியில் பாட்டி ராணியின் அரவணைப்பில் இருக்கிறார் கஸ்தூரி.

தாய், 9 ஆண்டுகளுக்கு முன் இறந்தநிலையில், ரிக்ஷா ஓட்டி காப்பாற்றி வந்த தந்தையும் மறைந்ததால், பாட்டியின் அரவணைப்பில் கஸ்தூரியும் அவரது சகோதரனும் தஞ்சம் அடைந்தனர். வறுமையிலும் பேரன், பேத்திகளை படிக்க வைத்துவரும்நிலையில், ராணியின் கணவரும் அண்மையில் இறந்ததால் இந்த குடும்பம் வருமானம் இன்றி திகைத்து நிற்கிறது.


Advertisement

image

குடிசை வீட்டுக்குள் படிக்க முடியாமல், வெளியே வந்து படிக்கும் சிறுமி, டிவி, செல்போன் இல்லாததால் இணையவழி வகுப்புகளில் இணைய இயலாமலும், கல்வி தொலைக்காட்சி வழி பாடங்களை அறிந்து கொள்ளமுடியாமலும் தவித்து வந்தார். இப்போது மழையால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ள சூழலில் படிப்பை தொடர முடியுமா என்பது சிறுமியின் தவிப்பாக உள்ளது.

வடகிழக்கு பருவமழையால், குடிசை வீடு இடிந்து விழுந்ததால் தற்காலிகமாக தார்ப்பாய் போட்டு மூடி வைத்திருக்கிறார் பாட்டி ராணி. ஆதரவற்ற நிலையில் உள்ள இந்த குடும்பத்தை மேலும் நிலைகுலைய வைத்திருக்கின்றன மழை பாதிப்புகள்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close