Published : 23,Aug 2017 04:37 AM

கோடிக்கணக்கில் மோசடி செய்த நிதி நிறுவனம் - போலீசார் தீவிர விசாரணை

Finance-company-fraudulent--in-Tiruppur

திருப்பூரில் உள்ள தனியார் சிட் நிறுவனத்தில் சீட்டு நடத்துவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையில் திரிபுரா சிட்ஸ் எனும் தனியார் நிதி நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக நிதி நிறுவனம் செயல்பட்டு வருவதால் திருப்பூர்  மார்க்கெட் பகுதியை சேர்ந்த சிறு வியாபாரிகள் மற்றும் பல்லடம் சாலையில் உள்ள வியாபாரிகள் இந்த நிறுவனத்தில் சீட்டுகளில் சேர்ந்து தினசரி முறையில் பணம் செலுத்தி வந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தி சீட்டுகள் முடிவடையும் நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை திருப்பி தராமல் நிதி நிறுவனத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரிபுரா நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு நிறுவன மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களின் புகாரையடுத்து நிறுவன மேலாளர் ஆனந்தை விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்