Published : 01,Dec 2021 07:08 PM

Eco India: குப்பைகளிலிருந்து எரிசக்தி; சாதக பாதகம் என்ன?

புதிய தலைமுறை டி டபுள்யூ எனும் புகழ்பெற்ற ஜெர்மனிய தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும், பச்சைப்பூமிக்கு பாத்தி கட்டும் காட்சி ஆவணம் ‘’ஈகோ இந்தியா’’(Eco India). இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் நிலவரத்தை நேரிடையாக ஆய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறது ஈகோ இந்தியா (Eco India). இந்த நிகழ்ச்சி தனிமனிதன் முதல் அரசு வரை அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது. மட்டுமின்றி சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயலும் பசுமைப்போராளிகளை அடையாளம் கண்டு உலகிற்குச் சொல்கிறது.

குப்பை ஒழிப்பை பொறுத்தவரை உலகம் முழுவதும் இரண்டு நடைமுறைகள் இருக்கிறது. ஒன்று புதைத்தல் மற்றொன்று எரித்தல். இதில் எரிக்கும் முறையே பரவலாக பின்பற்றப்படுகிறது. காரணம், எரிக்கும்போது உண்டாகும் வெப்பத்தை ஒரு ஆற்றலாக பயன்படுத்த முடியும். ஆனால் இதுதான் குப்பை ஒழிப்புக்கு சுலபவழியா என்று ஒரு கேள்வி எழுகிறது.

இந்த கேள்விக்கு பதிலளிக்கிறது டென்மார்க். டென்மார்க் நாட்டிலுள்ள ஒரு உயர்ந்த மலைபோன்று காணப்படும் இடம் குப்பைகளால் ஆனது. இந்த குப்பைமேட்டின் அடிவாரத்தில்தான் குப்பைகளை எரிக்கும் மிகப்பெரிய ஆலை அமைந்திருக்கிறது. ஆண்டொன்றுக்கு சுமார் 40,000 மெட்ரிக் டன் கழிவுகள் இங்கு எரிக்கப்படுகின்றன. எரியூட்டப்படுவதிலுள்ள 90 சதவிகிதம் உலோகக் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன. எரிக்கும்போது உண்டாகும் வெப்பம், டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரத்தின் எரிசக்தி ஆற்றல் தேவைகளை நிறைவுசெய்ய உதவுகிறது. இப்படி எரிப்பதன் மூலமாக குப்பை பிரச்னைக்கு ஒரு தீர்வு காணமுடியும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.

image

உலகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு இரண்டு பில்லியன் டன் கழிவுகள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறுகின்றன. பணக்கார நாடுகளில் மக்கள்தொகையை விட பலமடங்கு அதிகமான குப்பை சேர்கிறது. இதில் 37 விழுக்காடு நிலத்தில் புதைக்கப்படுகிறது. இதனால நிலத்தடி நீர் பாழ்படுவதுடன் மீத்தேன் வாயும் உருவாகிறது. மறு சுழற்சி அல்லது மட்கவைக்கும் விகிதம் 20 விழுக்காட்டிற்கும் குறைவாக நடக்கிறது. முக்கியமாக பல தெற்கத்திய நாடுகளில் குப்பை ஒழிப்புக்கு முறையான திட்டங்கள் இல்லை. பெரும்பாலான குப்பைகள் நதிகளில் கொட்டப்படுகின்றன. கடலில் மிதக்கும் நெகிழிக்கழிவுகளுக்கு நதிகளே மூலமாக இருக்கின்றன. குப்பைகளை முடிந்த அளவிற்கும் வேகமாகவும் ஒழிக்கவேண்டியிருப்பதால் சுமார் நூறுகோடி டன் குப்பைகள் வெட்டவெளிகளில் எரியூட்டப்படுகின்றன. இப்படி வெட்டவெளியில குப்பைகளை எரிப்பதால் உண்டாகும் கருப்புக்கரிமம் மற்றும் கரும்புகை புவி வெப்பத்தை அதிகரிக்கச்செய்து பெரும் பிரச்னையாக மாறுகிறது.

எரியும் குப்பைகளிலிருந்து வெளியேறும் நச்சுகள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றன. எங்கெல்லாம் குப்பைகள் எரியூட்டபடுகிறதோ அங்கே காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. குறிப்பாக குப்பைளை அகற்றும் பணியில் பெண்களே பெருமளவு ஈடுபடுவதால் அவர்கள் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள்.

கொட்டுவதற்கு இடமே இல்லாத நகரங்களில்தான் குப்பை எரிப்பு முறைகள் தோன்றின. இவை முதலில் லண்டனிலும், இரண்டாவது நியூயார்க்கிலும் அமைந்தன. ஆலை இயங்கும்போது வெளிப்படும் வெப்பம், எரிசக்தியாக மாற்றப்படுகிறது. இதற்கு கழிவிலிருந்து ஆற்றல் என்று பெயரிடுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் எண்ணெய்மூலம் மலிவு விலையில் எரிசக்தியை உற்பத்திசெய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே ’குப்பையிலிருந்து எரிசக்தி’ என்ற கருத்தாக்கதிற்கு வரவேற்பு குறைந்து பல திட்டங்கள் மூடப்பட்டன.

image

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பல ஆலைகள் உருவாக்கப்படுகின்றன. பதினெட்டு மில்லியன் மக்களுக்கு மின்சாரமும், பதினைந்து மில்லியன் மக்களுக்கு வெப்பமும் இந்த ஆலைகளில் இருந்து கிடைக்கின்றன. கழிவுகளைக் மேலாண்மை செய்யும் பொதுவான வாய்ப்புகள் டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருப்பதால் குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவது என்பது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. குப்பையிலிருந்து எரிசக்தி என்பது பொருளாதார சுழற்சிக்கான மாற்று நடவடிக்கை என்று சுற்றுச்சூழல் நிறுவனங்கள் கருதுகின்றன. குறிப்பாக அதிக நிலபரப்பு இல்லாத நாடுகளுக்கு எரிசக்தி தேவை அதிகமாக இருக்கிறது.

புதிய தொழில்நுட்பமும் கண்காணிப்பும் இல்லையெனில் அந்தபகுதிவாழ் மக்கள் சூழல்கேட்டால் பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளப்படும் ஆபத்து அங்கு இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் கார்பன் வெளியேற்றம் அதிகமாகியிருக்கிறது. 2019 கணக்கெடுப்பின்படி வருடத்திற்கு 52 மில்லியன் டன் வெளியேறியிருக்கிறது. அது 4,30,000 கார்கள் ஒரு மில்லியன் கிலோமீட்டர் ஓடுவதால் ஏற்படும் கார்பன் வெளியேற்றத்திற்கு ஒப்பானது. ஆனால் திட்டங்களை தீட்டுகிறவர்களும் தொழில் துறையினரும் இந்த ஆலைகளை காற்றாலை, சூரிய ஒளி ஆலை மற்றும் அணுமின் ஆலைகளுக்கு நிகராக ஒப்பிடுகிறார்கள். அதனால் கழிவுகளை நிலத்தில் புதைப்பதைவிட முறையான கட்டமைப்புடன் கூடிய மேலாண்மையுடன் கட்டுப்படுத்தப்பட்ட எரியூட்டல் சிறந்த முறையாகும். ஆனால் எரிசக்தி ஆற்றல் கிடைக்கிறது என்பதைவிட இதுதான் கழிவுகளை மேலாண்மைசெய்தவற்கான சுத்தமான வழி என்றும் கூறிவிட முடியாது.

image

இப்போது சீனா, இந்தோனேஷியா, இந்தியா போன்ற நாடுகளில் இந்த ஆலைகள் பல தொடங்குவதில் ஆச்சரியம் இல்லை. எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரில் ஆப்பிரிக்காவின் முதல் எரிசக்தி ஆலை தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் கழிவுகளை எரிசக்தியாக்கும் ஆலைகளை திறப்பதைவிட அதை பயன்படுத்துவதும், பராமரிப்பதும், மிகுந்த சிரமம் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இந்தியாவில் உணவுக்கழிவுகளில் 50 விழுக்காடு உயிர்ச்சத்துடனும் ஈரத்தன்மையுடனும் இருப்பதால் அதை எரியூட்டமுடியாது. அதேபோல மையப்படுத்தப்பட்ட குப்பை சேகரிப்பு இல்லாத பட்சத்தில் மக்கும் மற்றும் மக்காகுப்பைகள் கலந்தே காணப்படுகின்றன. குப்பைகளை வகை பிரிக்கும் முறை இந்தியாவின் எல்லா நகரங்களிலும் இருப்பதில்லை என்பதும் மிக முக்கிய பிரச்னை.

“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்! - அலசல் 

ஒரு கிலோ நெகிழிக்கலவை மற்றும் கச்சா எண்ணெயிலிருந்து சுமார் 40 மெகாஜூல்ஸ் எரிசக்தி கிடைக்கும். உணவுக்கழிவிலிருந்து 16 மட்டுமே கிடைக்கிறது. பிரிக்காத குப்பைகள் எரிகலன்களுக்குள் செல்வதால் அதனை எரிப்பதற்காக கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. இதனால இந்தமுறை திறம்பட செயல்படாமல் போகிறது. அதேபோல சூழலைக்கெடுக்கும் கழிவுகளை கையாள்வது பற்றியும் நாடுகள் சிந்திக்கவேண்டியிருக்கிறது. குப்பைப் பிரச்னைக்கு தீர்வுகாண உலக அளவில் தடையில்லாத முதலீடு கிடைக்க தொழில்துறை நிபுணர்களும், அரசும் ஏற்பாடு செய்ய வேண்டும். மறுசுழற்சி, மறுபடி பயன்படுத்துதல் மட்டுமல்லாமல் அதிகம் குப்பை உருவாகாத வாழ்க்கை முறையை படைக்க வேண்டும்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்