Published : 23,Aug 2017 03:34 AM

கணவரை கொன்று புதைத்த கொடூர மனைவி - உடலை தோண்டி எடுத்து போலீஸ் விசாரணை

wife-killed-her-husband-in-Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கணவரை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மத்தம் அக்ரஹாரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஜஸ்டின்.  டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஜஸ்டின், கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் அவர் கடந்த 20ம் தேதி முதல் மாயமாகியுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் ரத்த கரைகள் படிந்திருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
 
அதன் பேரில் போலீசார் ஜஸ்டினின் மனைவி இந்துவிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், இந்து தனது காதலன் லிண்டோ என்பவரின் உதவியுடன், தனது கணவரை கொலை செய்து மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தாசில்தார் பூஷண்குமார், மத்திகிரி போலீஸார் ஆகியோர் முன்னிலையில் ஜஸ்டினின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிறகு உடலை டாக்டர்கள் புவனா, ஸ்டாலின் தலைமையிலான மருத்துவ குழுவினர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்