சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், புளூ வேல் இணையதள விளையாட்டு இதற்கு காரணமா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா கடந்த திங்கள்கிழமை அன்று 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக தரையில் விழாமல் காரின் மேற்பகுதியில் விழுந்ததால், படுகாயங்களுடன் நிவேதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீல திமிங்கல விளையாட்டின் தாக்கத்தால் மாணவி நிவேதா தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவியின் தற்கொலை முயற்சிக்கு, புளூ வேல் எனப்படும் உயிரைப்பறிக்கும் நீல திமிங்கல விளையாட்டுத்தான் காரணமாக இருக்கக்கூடும் என தாங்கள் சந்தேகிப்பதாகவும், இருப்பினும் விசாரணை முடிந்த பின்னரே அது பற்றி உறுதியாக தெரிய வரும் எனவும் காவல்துறையினர் கூறினர்.
Loading More post
`அப்பா, அம்மா... என் இறப்பிலாவது சேருங்க’- 12ம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு
கியான்வாபி மசூதியில் சிவலிங்கமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்