மதுரையில் இரவு சினிமா பார்த்துவிட்டு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மதுரை மாநகர் திலகர் திடல் குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர் முருகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண், தனியார் நிறுவன உரிமையாளர் மகேஷ்குமார் என்பவருடன் இரவு சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாநகர் திலகர் திடல் குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர் முருகன், இருவரையும் மடக்கி மகேஷ்குமாரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்ததுடன், பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்.
இதில் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன உரிமையாளர் மகேஷ்குமார், திலகர் திடல் காவல்துறையிடம் இன்று மதியம் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையை தொடங்கினர்.
மேலும், மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் மதுரை மாநகர் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 25 வயது பெண் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணை காவல்துறையினர் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்ததில், சம்பவம் நடந்தது உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில், முதல்நிலை காவலர் முருகன் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடுத்தல், வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மதுரை மாநகர் அனைத்து மகளிர் தெற்கு காவல் துறையினர் முருகனை கைது செய்துள்ளனர்.
கூவம் ஆற்றில் அதிகரித்த நீரின் அளவு - கரையோர மக்களை பாதுகாக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்