Published : 22,Aug 2017 04:07 PM
சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்க வேண்டும்: திவாகரன் யோசனை

சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இல்லாத அமைச்சரவையை அமைத்தால் மட்டுமே அரசு நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஊழல் அமைச்சர்களை நீக்க வேண்டும் எனவும், புதிய அமைச்சரவையை அமைத்து அதில் இளைஞர்களுக்கு இடமளிக்க வேண்டும் எனவும் திவாகரன் கூறினார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஏற்கனவே 19 பேர் உள்ள நிலையில், தன்னிடமும் எட்டு எம்எல்ஏக்கள் பேசி வருவதாக தினகரன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போதைய தமிழக அரசு மைனாரிடியாக மாறியதால், முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.