பல்முனை சிக்கல்களால் நமநமக்கும் சிவகாசி பட்டாசுத் தொழில்

பல்முனை சிக்கல்களால் நமநமக்கும் சிவகாசி பட்டாசுத் தொழில்

பல்முனை சிக்கல்களால் நமநமக்கும் சிவகாசி பட்டாசுத் தொழில்

தீபாவளியின் தருணங்களை தெறிக்கவிடுவதில் சிவகாசி பட்டாசுகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என பல்முனை தாக்குதலில் சிக்கி நிலைகுலைந்து நிற்கிறது பட்டாசு தொழில்.

தீபாவளிப் பண்டிகைக்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன. வழக்கமாக இந்த நேரத்திலேயே வெளிமாநிலங்களில் இருந்து பட்டாசு ஆர்டர்கள் வந்துவிடும். ஆனால்‌ வடமாநிலங்களில் நீடிக்கும் வெள்ளம், டெல்லி‌, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ளது பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு புதிய சோதனையாக உருவெடுத்துள்ளது. ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளதாக கூறுகிறார்கள் பட்டாசு உற்பத்தியாளர்கள்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் பட்டாசுகளின் விலையில் 40 சதவிகிதம் வரை உயர்வு ஏற்பட்டுள்ளதும் தொழிலுக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். பல்வேறு நெருக்கடிகள் காரணமாக பட்டாசு தொழிலாளர்‌களின் நிலை நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. 
பட்டாசு தொழிலை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரியை குறைத்து தங்களது தீபாவளியை மகிழ்ச்சியான தீபாவளியாக்க வேண்டும் என்று கோருகிறார்கள் பட்டாசு தொழிலாளர்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com