பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பிற்கு செப்டம்பர் 2ம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திலீப்பின் சிறைவாசம் தொடர்கிறது.
பிரபல நடிகை கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி காரில் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் ஜூலை 10ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது 120பி கூட்டு சதி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நடிகர் திலீப், கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது ஜாமின் மனுவை ஜூலை 15ம் தேதி கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றமும், ஜூலை 24ம் தேதி கேரள உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. திலீப்பின் காவல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது,
அந்த அவகாசம் இன்றோடு நிறைவடைந்த நிலையில்நடிகர் திலீப் கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் இருந்து மீண்டும் காணொலி காட்சி மூலம் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜரானார். திலீப் மற்றும் வழக்கு தொடர்பாக நிறைய சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதால், திலீப்பின் காவலை நீட்டிக்கக் கோரி அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரீமா ரியாஸ், திலீப்பின் சிறைக்காவலை வரும் செப்டம்பர் 2ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் நடிகர் திலீப் கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்