[X] Close

நீட்: 24 ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்... ஸ்டாலின் பங்கேற்பு

All-party-protest-for-NEET-compulsion-in-Tamil-Nadu--MK-Stalin

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து 24 ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.


Advertisement

நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மத்திய அரசு திடீரென்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது எனக் கைவிரித்து விட்டது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் துரோகம் இழைத்து விட்டதாக கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement


இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொய்தீன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close