[X] Close

”பிக்பாஸ் நிகழ்ச்சியை தொய்வில்லாமல் பார்க்க ஒரு தோழியை அறிமுகப்படுத்துகிறேன்”: கமல்ஹாசன்

சினிமா

Kamal-Haasan-hosts-Bigg-Boss-Tamil-Season-5-from-hospital-takes-help-from-Ramya-Krishnan

‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 22 ஆம் தேதி பதிவிட்டார். தற்போது, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியினை, அவர் மருத்துவமனையில் இருப்பதால் அவருக்குப் பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ப்ரோமோவில் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்ட கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்தே பேசுகிறார்.


Advertisement

அந்த வீடியோவில், “வணக்கம் மக்களை நோக்கி மருத்துவமனை டிவியில் இருந்து பேசுவது உங்களுடன் நான்.தொய்வில்லாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டுகளிக்க ஒரு தோழி எனக்கு உதவி செய்வதாக அறிவித்திருக்கிறார். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றுக்கூற ’பாகுபலி’ படத்தின் பின்னணி இசை ஒலிக்க கெத்தாக வருகிறார் ரம்யா கிருஷ்ணன். எனவே ரம்யா கிருஷ்ணனே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளது உறுதியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close