
நரியங்குடி அருகே உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பள்ளிக் கூடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் நரியங்குடி மற்றும் கருவேளி கிராமங்களில், ஓடம் போக்கி ஆற்றங்கரையோரம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஆற்று நீர் புகுந்து, பீரோ, கட்டில், டி.வி, உள்ளிட்ட உடமைகள் சேதமடைந்துள்ள நிலையில் இங்கு வசிக்கும் மக்கள் அருகில் உள்ள தொடக்கப் பள்ளியிலும் சமுதாயக் கூடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதே போன்ற பாதிப்புகளில் சிக்கித் தவிக்கும் இப்பகுதி மக்கள்; தங்களுக்கு மேடான இடத்தில் அரசு வீடு கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.