ஆரணி: பசியால் துடித்த ஆட்டுக் குட்டிக்கு பாசத்தோடு பால் கொடுக்கும் நாய்

ஆரணி: பசியால் துடித்த ஆட்டுக் குட்டிக்கு பாசத்தோடு பால் கொடுக்கும் நாய்
ஆரணி: பசியால் துடித்த ஆட்டுக் குட்டிக்கு பாசத்தோடு பால் கொடுக்கும் நாய்

ஆரணி அருகே நாயக்கு பாலூட்டும் ஆட்டு குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சந்தவாசல் - படவேடு சாலையிலுள்ள காட்ரோடு பகுதியில் மல்லிகா லஷ்மி என்பவர் வசித்து வருகிறார். ஆடுகளை வளர்த்துவரும் இவர் நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நாயும் ஆடும் ஒரே சமயத்தில் குட்டிளை ஈன்றுள்ளது. இதையடுத்து, வீட்டில் ஒரு புறத்தில் ஆடு தனது குட்டியோடும், மறுபுறத்தில் நாய் தனது குட்டிகளோடும் இருந்து நிலையில், ஆடு தனது குட்டிகளுக்கு சரிவர பால் கொடுக்காததால் ஆட்டுக் குட்டி பால் கிடைக்காமல் பசியால் வாடியுள்ளது.

இதைப்பார்த்த அருகிலிருந்த தாய் நாய், தன்னுடைய குட்டிகளுக்கு எப்படி பால் கொடுக்குமோ அப்படியே ஆட்டு குட்டிக்கும் பால் கொடுத்து வருகிறது. இதையறிந்த இப்பகுதி மக்கள் அந்த நாயை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கினறனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com