'நேஷனல் ஜியோகிராஃபிக்' இதழில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்ணுக்கு இத்தாலி அரசு அடைக்கலம் அளித்துள்ளது.
1985 ஆம் ஆண்டு 'நேஷனல் ஜியோகிராஃபிக்' இதழின் அட்டைப்படத்தில் ஆப்கானிய பெண் ஒருவர் இடம்பெற்றிருந்தார். அந்த புகைப்படம் வெளியானதையடுத்து, அந்த பெண்ணுக்கு இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகியால் (Mario Draghi) அகதி அந்தஸ்து வழங்கியதாக இத்தாலிய அரசாங்க செய்தி அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த அட்டைப்படத்தில் இடம்பெற்றவர், 12வயதான ஷர்பத் குலா (Sharbat Gula). ஆப்கானின் பஸ்தூன் இனத்தைச்சேர்ந்த தாய், தந்தையரை இழந்தவர், ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் இருந்த அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். 1984 இல் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் அடுத்த ஆண்டு நேஷனல் ஜியோகிராஃபிக் இதழில் வெளியிடப்பட்டது.
பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசிக்கும் ஷர்பத் குலாவின் பெயர் யாருக்கும் தெரியாத நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. 40 வயதையொட்டிய அவர் ரோமை வந்தடைந்துள்ளதாக இத்தாலியன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 1980களில் அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்கரி எடுத்த புகைப்படத்தால் அவர் உலக அளவில் பிரபலமான அகதியாக அடையாளம் காணப்பட்டார். ஆப்கானில் உள்ள என்ஜிஓ ஒன்றின் மூலம் ஷர்பத் குலா இத்தாலிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!