கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து இருப்பதால் இன்றும் அங்கு தக்காளி விலை சற்று குறைந்து இருக்கிறது.
கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலத்தில் இருந்து சரக்குகள் கூடுதலாக வரத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, சட்டீஸ்கர் ஆகிய வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் கோயம்பேடு சந்தைக்கு இன்று 50 லாரிகளில் தக்காளி வரத்து இருந்துள்ளது. இதனால் இன்று தக்காளி விலை சற்று குறைந்து இருக்கிறது. நாட்டு தக்காளி முதல் ரகம் கிலோ 60 ரூபாய்க்கும், கோயம்பேடு சந்தையில் பொதுமக்களுக்கு நேரடியாக சில்லறை விற்பனையில் 80 ரூபாய்க்கு கிடைக்கும். இரண்டாம் ரகம் கோயம்பேடு சந்தையில் கிலோ 50 ரூபாய்க்கு கிடைப்பதில், பொதுமக்களுக்கு சில்லறையாக 70 ரூபாய்க்கு கிடைக்கும்.
போலவே தக்காளி கோயம்பேடு சந்தையில் முதல் ரகம் 50 ரூபாய். பொதுமக்களுக்கு நேரடி விற்பனையில் 70 ரூபாய். இரண்டாம் ரகம் கோயம்பேடு சந்தையில் 40 ரூபாய், பொதுமக்கள் நேரடியாக பெறும்போது 60 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று கிலோ 64 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 34 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளிலும் தேவையான தக்காளி கையிருப்பில் இருப்பதாகவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் இன்னும் சில நாட்களில் தக்காளி வரத்து சென்னைக்கு வரத் தொடங்கினால் கோயம்பேடு மார்க்கெட்டில் விலை வெகுவாக குறையும் என தக்காளி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி: “தக்காளி எவ்வளவு விலை விற்றாலும் விவசாயிகளுக்கு நஷ்டம்தான்”-விலைஉயர்வு குறித்து முழு அலசல்
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!