தென் மாவட்டங்களில் அதிகனமழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதே நேரத்தில் திருவாரூரில் மழை காரணமாக நாளைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதை புதிய தலைமுறை செய்தியாக வெளியிட்டிருந்தது.
அதோடு அந்த செய்தியை புதிய தலைமுறையின் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டிருந்தது. இந்த நிலையில் ட்விட்டர் மாணவர் ஒருவர் புதிய தலைமுறை வெளியிட்ட அந்த செய்தியை ரீட்வீட் செய்திருந்தார். அதில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகானந்த் ரெட்டியையும் ‘டேக்’ செய்து “சார், விருதுநகரிலும் கனமழை பொழிந்து வருகிறது” என சொல்லி இருந்தார் அந்த பயனர்.
#BREAKING | திருவாரூரில் நாளை (26.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு #TNRains | #SchoolLeave | #Thiruvarur pic.twitter.com/yyQ2ykJ0cj
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 25, 2021Advertisement
அதை கவனித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகானந்த் ரெட்டி, “விடுமுறை வேண்டி உங்கள் தொடர் பிரார்த்தனைகளுக்கு நன்றி. நம் மாவட்டத்திலும் அதிக மழை பொழிவு இருந்து வருகிறது தம்பி. அதனால் நாளை (26.11.21) மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை பயன்படுத்தி ஹோம்வொர்க்கை முடிக்கவும். ஆசிரியர்கள் சரிபார்ப்பார்கள். பாதுகாப்பாக இருங்கள்” என சொல்லி அதற்கு ரிப்ளை கொடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் ரிப்ளை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?