’மாநாடு’ படத்திற்காக தைரியமூட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
சிம்பு நடிப்பில் உருவான 'மாநாடு' திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒத்திவைப்பதாக நேற்று மாலை அறிவித்தார். பைனான்சியரிடம் பெறப்பட்ட கடனை திரும்ப செலுத்தாததே அதற்கு காரணம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி 11 மணி மணியளவில் படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனாலும், அதிகாலை வரை தயாரிப்பாளர் - பைனான்சியர் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. அதனால் திரையரங்குகளுக்கு KDM கிடைக்கப்பெறாததால் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 8 மணியில் இருந்து திரையிடப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், 'மாநாடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
படம் வெளியான நெகிழ்ச்சியில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “நானே எதிர்பார்க்காத தடங்கல் மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
நானே எதிர்பார்க்காத தடங்கல் #மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.. — sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2021
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!