
சென்னையில் இருந்து ஆந்திரா சென்ற ஒரு கார், சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக காரில் இருந்த 7 பேரும் உயிர் தப்பியுள்ளனர்.
சென்னை சூளைமேட்டில் இருந்து காது குத்து விழாவொன்றுக்காக ரவி என்பவர் தமது குடும்ப உறுப்பினர்கள் 7 பேருடன் ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு காரில் சென்ற போது, சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் கவரைப்பேட்டை பகுதியை அடுத்த பெருவாயல் என்ற இடத்தில் காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்ததால், காரை நிறுத்தி அதில் பயணித்த 7 பேரும் உடனடியாக இறங்கினர். அதற்குள் தீ மளமளவென பரவி, கார் முழுமையாக எரிந்தது.
நல்வாய்ப்பாக அனைவரும் கீழே இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த பொன்னேரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, கார் முழுமையாக எரிந்திருந்தது. இந்த தீ விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி: வேளச்சேரி: சைக்கிளில் சென்ற பெண் மீது பேருந்து மோதி விபத்து - ஓட்டுநர் கைது