Published : 25,Nov 2021 08:39 AM
பொறியாளர் வீட்டில் பணத்தை பதுக்கவே அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாய்: ரூ.25 லட்சம் பறிமுதல்

கர்நாடகாவில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் வீட்டில் பணம் பதுக்கலுக்காகவே அமைக்கப்பட்ட கழிவுநீர் இணைப்புக் குழாய்க்குள் பதுக்கி வைத்திருந்த 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை ஊழல் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கர்நாடகாவில் 15 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான 68 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனையிட்டனர். கலபுரகி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் சாந்தா கவுடா தமது வீட்டிலும் சோதனை நடக்கலாம் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் வீட்டில் இருந்த கட்டுக்கட்டான ரூபாய் நோட்டுகளையும், தங்க ஆபரணங்களையும் கழிவுநீர் குழாய் போல் அமைப்பு ஏற்படுத்தி அதற்குள் பதுக்கியுள்ளார்.

அதனை அறிந்த அதிகாரிகள் கழிவுநீர் குழாய்களை வெட்டி எடுத்து, அவற்றிற்கு பதுக்கப்பட்டிருந்த 25 லட்ச ரூபாய் பணம், பல கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.