உலக அளவில் கடந்த 2019 இறுதியில் இருந்தே கொடூர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா பெருந்தொற்று. இந்த நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஜெர்மனி நாட்டில் இன்று ஒரே நாளில் 66,884 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளது. அதனால் மீண்டும் அந்த நாட்டில் முழு ஊரடங்கு அமலாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நாளுக்கு நாள் அந்த நாட்டில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை மருத்துவ பணியாளர்களை அழுத்தத்திற்கு ஆளாக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் 3G விதிமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது அந்த நாட்டு அரசு. அதாவது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அண்மையில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள், ‘கொரோனா இல்லை’ என்ற சோதனை மேற்கொண்டு சான்றிதழ் வைத்துள்ளவர்கள் மட்டுமே அலுவலகம் மற்றும் பொது போக்குவரத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பது தான் 3G விதி.
அந்த நாட்டின் ஐசியூ வார்டுகளில் நோயாளிகள் நிரம்பி உள்ளனராம். அதில் 90 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என தெரிவித்துள்ளது அந்த நாட்டு அரசு.
ஒட்டுமொத்த ஜெர்மனி நாட்டின் மக்கள் தொகையில் 68 சதவிகிதம் மக்கள் தான் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பிராந்திய அரசுகள் தொற்று பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனவாம்.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்