ரயில்களை சுற்றுலா நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என புதிய அறிவிப்பு ஒன்றை ரயில்வேத்துறை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவைகளை ரயில்வேத்துறை வழங்கி வருகிறது. இந்நிலையில், பாரத் கவுரவ் எனும் பெயரில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா ரயில்களை இயக்க அத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான பயணங்களுக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களோ அல்லது மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்களோ ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய வாடகையையும் அந்நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
"மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகளை விற்கக்கூடாது" - சென்னை காவல்துறை எச்சரிக்கை
இதற்கான ஆன்லைன் பதிவுக்கட்டணமாக ஒரு லட்சம் ரூபாயும், மேலும் பல கூடுதல் வசதிகளை பயன்படுத்த 1 கோடி ரூபாய் வைப்புத்தொகை செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வமுடன் இருப்பதாக ரயிவேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்