[X] Close

இந்தியாவில் முதல் வணிக வளாகத்தை தொடங்க உள்ளது IKEA!

வணிகம்

IKEA-to-launch-first-mall-in-India-s-Gurgaon-Haryana-State

உலக அளவில் சில்லறை விற்பனையில் பிரபலமான நிறுவனமான INGKA ஹோல்டிங் நிறுவனம் இந்தியாவில் முதல் IKEA வணிக வளாகத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வணிக வளாகம் டெல்லிக்கு அருகில் உள்ள குர்கான் நகரில் அமைய உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

image

சுமார் 3500 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் அதற்கான பணிகள் நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2022 வாக்கில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் INGKA தெரிவித்துள்ளது. 


Advertisement

முன்னதாக நொய்டாவில் வணிக வளாகம் அமைக்க நிலம் வாங்கி இருந்ததாகவும் தெரிவித்திருந்தது INGKA. இருந்தாலும் குர்கானில் தான் தங்களது முதல் வணிக வளாகம் அமையும் என தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து நொய்டா பகுதியில் அடுத்த வளாகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். 

“INGKA-உடன் இணைந்து குர்கானில் IKEA ஸ்டோரை கொண்டு வருவதில் மகிழ்ச்சி. நிச்சயம் எங்களது தயாரிப்பு மூலம் மக்களை ஈர்ப்போம்” என தெரிவித்துள்ளார் IKEA இந்திய சி.இ.ஓ பீட்டர் பெட்சல். 


Advertisement

Advertisement
[X] Close