Published : 22,Aug 2017 06:38 AM

துருக்கியில் விக்ரமுடன் மோதும் பார்த்திபன்!

-Dhruva-Natchathiram--new-schedule-begins-in-Turkey

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், ‘துருவ நட்சத்திரம்’. பார்த்திபன், பிருத்விராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா, சிம்ரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். 

ஸ்பை த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு துருக்கியில் நடக்கிறது. அங்குள்ள இஸ்தான்புல் நகரில் பார்த்திபனும் விக்ரமும் மோதும் ஆக்ரோஷமான ஆக்‌ஷன் காட்சியை கவுதம் இயக்குகிறார். இதையடுத்து அபுதாபியில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. அங்கும் ஆக்‌ஷன் காட்சிகளையும் சில வசனக் காட்சிகளையும் படக்குழு படமாக்குகிறது. 
இந்தப் படத்தை அடுத்து ஹரி இயக்கும் ’சாமி 2’ படத்தில் நடிக்கிறார் விக்ரம். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்குகிறது. இதில் விக்ரம் ஜோடியாகவும் த்ரிஷாவும் கீர்த்தி சுரேஷும் நடிக்கின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்