தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காஞ்சிபுரத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் பெருநகர் மாதிரி பள்ளியில் ஆய்வகத்தை திறந்துவைத்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளரிடம் பேசியபோது, ’’செப்டம்பர், நவம்பர் மாதத்தில் இருந்துதான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வுகுறித்து அச்சம் அடையக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. ஜனவரி மாதத்தில் மாதிரித் தேர்வுகள் நடைபெற்று, வழக்கம்போல் பொதுத்தேர்வானது மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் நடைபெறும்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு உள்ளது. அதே விழிப்புணர்வு தனியார் பள்ளி ஆசிரியர்களிடமும் அதிகரிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளியில் பாலியல் தொடர்பான பிரச்னை இருந்தால் அதை மறைக்காமல் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான், மூடி மறைக்காமல் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றார்கள் என்று அந்த பள்ளியின் மீது பெற்றோர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
திருவள்ளூர்: பள்ளி வகுப்பறையில் 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்
ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 35 சதவீதத்தில் இருந்து 55 சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் எது எது மாணவர்களுக்கு முக்கியமானதோ, தேவையோ அதில் எதுவுமே குறைக்கவில்லை; மாணவர்களுக்கு அதி முக்கியமாக எது தெரிய வேண்டுமோ அது கண்டிப்பாக இருக்கும்’’ என்றார்.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!