Published : 23,Nov 2021 10:59 AM

இந்தியாவில் ஒரேநாளில் 7,579 பேருக்கு கொரோனா

7-579-tested-corona-positive-in-India-within-24-hours

இந்தியாவில் ஒரேநாளில் 7,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,579 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 3,45,26,480 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,202 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,39,46,749 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

image

அதே நேரத்தில் இன்று மட்டும் 236 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,66,147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மட்டும் தற்பொழுது 1,13,584 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.32 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.35 ஆகவும் உள்ளது.

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.632 சரிவு

நேற்று மட்டும் ஒரே நாளில் 71,92,154 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 117.63 கோடி டோஸ் தடுப்பூசி இந்தியாவில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்