நிஜத்திலும் ’திருமணம்’ செய்துகொண்ட சித்து - ஷ்ரேயா ஜோடி: புகைப்பட ஆல்பம்

நிஜத்திலும் ’திருமணம்’ செய்துகொண்ட சித்து - ஷ்ரேயா ஜோடி: புகைப்பட ஆல்பம்
நிஜத்திலும் ’திருமணம்’ செய்துகொண்ட சித்து - ஷ்ரேயா ஜோடி: புகைப்பட ஆல்பம்

சின்னத்திரை ஜோடிகள் சித்து- ஷ்ரேயா திருமணம் நேற்று நடைபெற்றது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் டி.ஆர்.பியிலும் ரசிகர்கள் மத்தியிலும் சூப்பர் ஹிட் அடித்த சீரியல் ‘திருமணம்’. இந்த சீரியலில் நாயகனாக சித்துவும் நாயகியாக ஷ்ரேயா அஞ்சனும் நடித்திருந்தனர். சீரியலில் ரீல் லைஃப் கணவன் மனைவியாக நடித்தவர்கள், தற்போது ரியல் லைஃபிலும் ‘திருமணம்’செய்து கொண்டுள்ளனர்.

ஷ்ரேயா அஞ்சன் ‘திருமணம்’ சீரியலுக்குப் பிறகு விஜய் டிவியில் ‘அன்புடன் குஷி’ சீரியலில் நடித்தார். சித்து தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் நான்காம் இடத்தில் உள்ள ‘ராஜா ராணி 2’ வில் ஹீரோவாக நடித்து வருகிறார். ’திருமணம்’ சீரியலில் நடிக்கும்போதே காதலிக்கத் துவங்கிய இந்த ஜோடியின் திருமணத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், தங்கள் மெஹந்தி ஃபங்ஷன் வீடியோவை தாங்கள் புதிதாக ஆரம்பித்துள்ள யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். நேற்று காலையில் திருமணமும் நேற்றிரவு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருமணத்தில் சின்னத்திரை நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com